கனட வெளியுறவுத் துறை அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் ஷாம்பெயின், இந்தியாவின் வெளியுறவுத் துறை ஜெய் சங்கர் இருவரும் நேற்று (நவ.18) ஆன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதில், இருநாடுகளின் தலைநகரங்களான ஒட்டாவா, டெல்லி இரண்டும் உலக விவகாரங்களில் ஒத்துழைப்பது குறித்து சுட்டிக்காட்டிப் பேசினர். இந்தக் காணொலி சந்திப்புக்குப் பின்னர் தங்களது அனுபவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
அதில், இருநாட்டுக்கும் இடையிலான உறவின் வருங்கால வளர்ச்சி நம்பிக்கையளிக்கிறது என வெளியுறவுத் துறை ஜெய் சங்கர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக கனேடிய வெளியுறவுத் துறை அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் ஷாம்பெயின்,”2019ஆம் ஆண்டு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நடைபெற்ற இந்தியா-கனடாவுக்கு இடையிலான வலிமையான வர்த்தகம், முதலீடு குறித்து கலந்துரையாடினோம். நாங்கள் வருங்காலத்திலும் இணைந்து செயல்படுவோம்” என டவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:போலி ராணுவ சீருடைகள் அணிந்து சுற்றித்திரிந்த 11 இளைஞர்கள் கைது!