தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி அவசர சட்டம்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் திடீர் ஆதரவு.. சோனியா காந்தி முடிவு!

டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி போராட சோனியா காந்தி உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sonia Gandhi
Sonia Gandhi

By

Published : Jul 15, 2023, 10:13 PM IST

டெல்லி : டெல்லி அவசரச் சட்டம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கேள்வி எழுப்பும் என சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் தெரிவித்து உள்ளார்.

ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில் பாஜகவை எதிர்த்து போராட உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. டெல்லி அவசர சட்ட விவாகரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை டெல்லி முதலமைச்சரும் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரிய நிலையில், அது குறித்து கடந்த வாரங்களாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக தடுத்த போதிலும் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு அதரவு தெரிவிக்க முன்வந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் டெல்லி அவசர சட்டம் தொடர்பாக மசோதா கொண்டு வரப்படும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் இந்த தாக்குதல் பல்வேறு வடிவங்களில் வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில நேரங்களில் மோடி தலைமையிலான அரசிடமிருந்து நேரடியாகவும், சில சமயங்களில் அவர் நியமித்தவர்கள் மூலமாகவும் வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை காங்கிரஸ் கடந்த காலங்களில் தொடர்ந்து எதிர்த்து உள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசியலமைப்பு அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாகவும், மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்பு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கும் முன் அதன் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவும், அதேநேரம் டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக போராடவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியை ஆளும் ஆம் அத்மி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் இருப்பதாகவும், மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் வாக்களிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் கோரிக்கை விடுத்தார். அது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதையும் படிங்க :நாடாளுமன்ற தேர்தலில் அபிஷேக் பச்சன் போட்டி? சமாஜ்வாதி கட்சியில் விரைவில் இணைகிறார்?

ABOUT THE AUTHOR

...view details