தமிழ்நாடு

tamil nadu

சிறுவனைச் சுற்றி வளைத்து கடித்த 5 தெருநாய்கள்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

By

Published : May 27, 2022, 9:39 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் 9 வயது சிறுவன் வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஐந்து தெருநாய்கள் சிறுவனை துரத்தி கடித்ததில் படுகாயமடைந்தார்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ஜெய்ப்பூர், ராதா நிகுஞ்ச் பகுதியைச் சேர்ந்த சிறுவன், கடந்த சில நாட்களுக்கு முன் தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஐந்து தெருநாய்கள், சிறுவனை துரத்தி கடித்து தாக்கி உள்ளது.

நல்வாய்ப்பாக அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் ஸ்கூட்டியில் வந்த இரண்டு பெண்கள் நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர். நாய்கள் கடித்ததில் சிறுவனின் உடலில் 40 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இச்சம்பவத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், "சாலையில் சிறுவன் நின்று கொண்டிருக்கையில், நாய்கள் தன்னை நோக்கி வருவதை அறிந்த சிறுவன் ஓட முயற்சிக்கிறான். பின் நாய்கள், சிறுவனை துரத்தி, சுற்றி வளைத்து தரையில் தள்ளி கடித்து தாக்குகிறது. நல்வாய்ப்பாக அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் நாயை துரத்த முயற்சிக்கின்றனர்.

சிசிடிவி காட்சி

அதைத்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த இரண்டு பெண்கள் நாயை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர். சாகேத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடலில் நாய்கள் கடித்ததில் 40 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுவன் சிகிக்சை முடிந்து நேற்று(மே 26) வீடு திரும்பி உள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், "இச்சம்பவத்தின் போது நாங்கள் வீட்டில் இல்லை. பள்ளி முடிந்து அவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த வேளையில் நாய்கள் கடித்துள்ளது. என் குழந்தையை மீட்டு தந்த இரண்டு பெண்களுக்கும் மனமார்ந்த நன்றி. என் குழந்தை இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விளையாட்டு மைதானத்தில் நாயை வாக்கிங் அழைத்து சென்ற ஐஏஎஸ் தம்பதி பணியிட மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details