ஜெய்ப்பூரில் இன்று(பிப்.14) இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராரில் இருபிரிவினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கற்களை வீசிக்கொண்டதில் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் ஆணையர் ராகுல் பிரகாஷ் மற்றும் காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தகராரில் ஏரளமான வாகனங்களும்,வீட்டின் ஜன்னல்களும் சேதமடைந்தன. இதையடுத்து இந்த தகராறில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் எந்தவித அசாம்பாவிதமும் நிகழாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.