தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி மசூதியில் காவி கொடியேற்றும் முயற்சி நடந்ததா? காவல்துறை விளக்கம்!

ஜஹாங்கீர்புரி கலவரம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி மசூதிகளில் காவி கொடியேற்றும் நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை எனக் காவல்துறை தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

Jahangirpuri violence
Jahangirpuri violence

By

Published : Apr 19, 2022, 8:36 AM IST

புது டெல்லி: டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் ஏப்.16ஆம் தேதி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பினர் மறைந்திருந்து கற்களை வீசி தாக்கினர்.

தொடர்ந்து இரு தரப்பினர் இடையே வன்முறை வெடித்தது. அப்பகுதியில், துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இந்த நிலையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் துணையுடன் கல்லெறிதலில் ஈடுபட்ட நபர்களை கைதுசெய்துவருகின்றனர்.

ஜஹாங்கீர்புரி வன்முறை

இதுவரை 2 இளஞ்சிரார்கள் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை குறித்து டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், “மசூதிகளில் காவிக் கொடியேற்றும் முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உள்ளூர் காவலர்கள் மூலம் அறியமுடிகிறது.

எனினும் சிலர் வதந்தியை பரப்புகின்றனர். ஆகையால் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சம்பவ இடத்தில் புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறையாளர்களை கைது செய்ய 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பான காணொலிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளில் பதிவான முகங்களை வைத்து வன்முறையாளர்களை தேடிவருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க : ஜஹாங்கீர்புரி வன்முறை; 14 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details