தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு - ஜெகதீப் தங்கர்

நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவி ஏற்றார்.

jagdeep-dhankhar-sworn-in-as-14th-vice-president-of-india
jagdeep-dhankhar-sworn-in-as-14th-vice-president-of-india

By

Published : Aug 11, 2022, 12:53 PM IST

டெல்லியில் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமித் ஷா, ராஜ் நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் உடனிருந்தனர்.

புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கரும். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் 725 பேர் வாக்களித்தனர். இதில் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளும் கிடைத்தன. அதோடு 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஆக 11) குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவி ஏற்றார்.

இதையும் படிங்க:பிரதமரின் ‘பிளாக் மேஜிக்’ பேச்சு - காங்கிரஸ் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details