போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் சிஹோரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் கிரி(85) என்ற முதியவரை, கடந்த மாதம் அவரது மகனும் மருமகளும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட முதியவர் ஜபல்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஆஷிஷ் பாண்டேயாவிடம் புகார் தெரிவித்தார். அந்த வீடு தனக்கு சொந்தமானது என்றும், தனது மகன் தன்னை விரட்டிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, துணை ஆட்சியர் முதியவரின் மகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பின்னர் தந்தையையும் மகனையும் அழைத்து, இருவருக்கும் தனித்தனியாக ஆலோசனை வழங்கியுள்ளார். இருவரும் மனம் விட்டு பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி தந்தையும் மகனும் கலந்து பேசி ஒன்று சேர்ந்துள்ளனர். பிறகு போலீசாரின் அறிவுரைப்படி, தந்தையை வீட்டை விட்டு அனுப்பியதற்கு பரிகாரமாக, அவரது பாதங்களை மகன் கழுவினார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வீட்டிற்கு சென்றனர். தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சினையை வழக்காக மாற்றாமல், சுமூகமாக தீர்த்து வைத்த துணை ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கேசிஆர் அடுத்த மூவ்; எம்.பி., ஆகிறார் பிரகாஷ் ராஜ்?