தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

”ஜம்மு-காஷ்மீர் அண்டை நாடுகளுக்கிடையேயான அமைதிப்பாலமாக மாற மாறவேண்டும்” - மெகபூபா முப்தி - அமைதிப்பாலமாக ஜம்மு காஷ்மீர் மாறவேண்டும்

இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பாலமாக ஜம்மு-காஷ்மீர் மாறவேண்டும் எனத் தங்கள் கட்சி விரும்புவதாக, மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

PDP chief Mehbooba Mufti
'ஜம்மு-காஷ்மீர் அண்டை நாடுகளுக்கிடையேயான அமைதிப்பாலமாக மாற மாறவேண்டும்'- மெகபூபா முப்தி

By

Published : Nov 3, 2020, 9:50 PM IST

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீர் இளைஞர்கள் குழுவுடனான சந்திப்பிற்கு பின்பு ஊடகங்களிடம் மெகபூபா முப்தி பேசினார். அப்போது, சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பதற்றங்கள் குறித்து குறிப்பிட்டார். உண்மையான கட்டுப்பாட்டு எல்லையை சீனா மீறுவதாக அப்போது அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கிடையிலான அமைதிப்பாலமாக ஜம்மு காஷ்மீர் மாறவேண்டும் என்ற தனது தந்தையின் கருத்தை மேற்கொள் காட்டிய அவர், இதனை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, ”காஷ்மீர் மக்கள்மீது திணிக்கப்படும் சட்டத்தை ஏற்கமாட்டோம், காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று தெரிவித்த அவர், முன்பு நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மக்களுக்கு ஆதரவான சட்டங்களாக இருந்ததாகவும், தற்போது, காஷ்மீர் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சட்டங்கள் திணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தான் ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார நிலை குறித்து அறிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சரி பாதியாகப் பிரிந்த ஜம்மு-காஷ்மீர்

ABOUT THE AUTHOR

...view details