தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரின் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - குப்வாராவில் 2 பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

J&K : Two militants killed in Kupwara at LoC
J&K : Two militants killed in Kupwara at LoC

By

Published : Sep 25, 2022, 3:27 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுக்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பாதுகாப்பு படை அலுவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் அலுவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து குப்வாரா போலீசார் தரப்பில், இந்த சம்பவம் குப்வாராவின் மச்சில் பகுதியில் நடந்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. அவர்களிடமிருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரேணிகுண்டா தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - மூவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details