ஸ்ரீநகர்:ஜம்மூ காஷ்மீரின் வாங்கம் பகுதியில் உள்ளூர் போலீசாருடன் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று (ஜூன் 19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டிருப்பது அல்-பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நாஜிம் ஆ பட், சிராஜ் தின் கான், அடில் குல் என்பதும், கிரால்குண்ட் பகுதியில் பதுங்கியிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.