தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் 64 திருத்தங்கள் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை - ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்

ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் இயற்றியிருந்த சட்டங்களில் 64 திருத்தங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

MHA
MHA

By

Published : Jul 4, 2021, 12:38 PM IST

2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி மாநில அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக மாற்றியது.

இந்நிலையில், மாநிலத்தின் அப்போதைய சட்டப்பேரவை சார்பில் இயற்றபட்ட சட்டங்களில் 64 திருத்தங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்(2019) 96ஆம் பிரிவின் இந்த திருத்தங்களை உள்ளதுறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.

அன்மையில், ஜம்மு காஷ்மீரின் முன்னணி அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அங்கு தொகுதி மறுவரைவு செய்து தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க:பாம்புகளுடன் பயமில்லா வாழ்க்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details