பிடிபி கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். குப்கார் சாலையில் உள்ள தனது இல்லத்தை பாதுகாப்பு படையினர் சூழ்ந்துகொண்டு போக்குவரத்தை முடக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ட்ரால் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை பாதுகாப்பு வீரர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர்களை நேரில் சந்திக்க மெகபூபா முஃப்தி இன்று திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பை தடுக்கும் விதமாக தான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மெகபூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.