ஜம்மு-காஷ்மீர் புட்கம் மாவட்டத்தில் நர்பால் பகுதியில் உள்ள 73 பட்டாலியனைச் சேர்ந்த ஒரு மத்திய ரிசர்வ் காவல் படை வீரரின் துப்பாக்கியிலிருந்து தவறுலதாக குண்டு வெளியானது. அப்போது அங்கிருந்த மக்கள் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தவறுலதாக எண்ணி அச்சம் கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் காயம் - சிஆர்பிஎப் வீரர்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து தவறுலதாக குண்டு வெளியேறியதில் அப்பாவி ஒருவர் காயமடைந்தார்.
person injured
அப்போது மக்களிடையே குழப்பம் நிலவியதால் அங்கிருந்து கூட்டமாக வெளியேற முயற்சித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து நிலைமை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இது குறித்துக் காவலர் ஒருவர் கூறுகையில், "கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.
Last Updated : Dec 7, 2020, 7:55 PM IST