ஜம்மு:ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாவட்ட தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான குலாம் மொஹி-உத்-தின் மிர், இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பணியிலிருந்த காவலரை கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய மூத்த காவல் அலுவலர், "தேசிய மாநாட்டு கட்சி அலுவலகத்தில், சிறிய பிரச்னை தொடர்பாக குலாம், காவலர் அப்துல் தாணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அவர், தாணியை அறைந்துள்ளார். இதுகுறித்து புகார் வந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார். இந்நிலையில், பணியிலிருந்த அலுவலருக்கு இடையூறு கொடுத்ததாக குலாம் மீது வழக்குப்ப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மத்திய அரசு - விவசாயிகள் பேச்சுவார்த்தை தோல்வி!