தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை மடக்கி பிடித்த கிராம மக்கள் - LeT terrorists in Jammu

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை அப்பகுதி மக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைந்தனர்.

j-and-k-let-militants-overpowered-by-villagers-in-reasi-handed-over-to-police
j-and-k-let-militants-overpowered-by-villagers-in-reasi-handed-over-to-police

By

Published : Jul 3, 2022, 11:53 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் துக்சன் கிராமத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்துள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களை தீவிரமாக கண்காணிக்கவே இருவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது. இதனால் கிராம மக்களே சேர்ந்து இருவரையும் மடக்கிப்பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

முதல்கட்ட தகவலில், இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தகள் என்பதும், ரஜோரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டுவந்ததும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன. கிராம மக்களின் துணிச்சலுக்காக 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:முகமது ஜுபைருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ABOUT THE AUTHOR

...view details