தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று ஜன 24 நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் உள்ள அரசிதழ் இல்லா அலுவலர் (non-gazetted) பணிகளில் பெண்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது வெறும் தொடக்கம் தான் இந்த முன்னேற்ற பாதையில் எதிர்காலத்திலும் நிர்வாகம் தொடர்ந்து பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களும் சிறுமியர்களும் மாற்றத்தின் தூதர்கள். பெண் சக்திகளின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு ஜம்மு காஷ்மீர் அரசு தொடர்ந்து செயலாற்றும் எனக் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிக வேலையிடங்களைக் கொண்ட துறையாக காவல்துறை உள்ளது. அங்கு பல அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உள்ள நிலையில், பல முக்கிய பிரமுகர்களுக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:HOROSCOPE: ஜனவரி 25 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?