ஜம்மு காஷ்மீர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 20 ஆண்டுகளாக பிரிவினைவாத கருத்துகளை பரப்பிவரும், ஹுரியத் மாநாட்டின் இரண்டு அமைப்புகளும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) சட்டத்தின் கீழ் தடை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அமைப்பு மருத்துவம் பயில விரும்பும் காஷ்மீர் மாணவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றுத்தருவதாகவும், அந்தப் பணத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஹிஸ்புல் முஜாகீதின், துக்தரன்-இ-மில்லத், லஷ்கர் இ தொய்பா ஆகிய இயக்கங்களுக்கு ஹுரியத் மாநாடு கூட்டமைப்பு நிதியுதவி அளிப்பதாக ஒன்றிய அரசின் உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.