தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதி கொலை, குடிமக்களுக்கு குண்டடி - பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Kulgam
Kulgam

By

Published : Aug 13, 2021, 11:29 AM IST

ஸ்ரீநகர்:ஜம்மு -காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் மல்போரா மிர்பஜார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சிஆர்பிஎஃப் வீரரும், ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சண்டையில், குல்காமில் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குண்டடியுடன் உயிர் தப்பினர்.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details