காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு சில நாள்களுக்கு முன்னர் அந்நிறுவனத்தால் முடக்கப்பட்டது.
டெல்லியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைக் கடந்த வாரம் சந்தித்த ராகுல் காந்தி, அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.
ராகுல் கணக்கு முடக்கம்
பாலியல் வழக்கு விதிமுறையை மீறி, ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவரின் உறவினரின் படத்தை பதிவிட்டதாகக் கூறி, ராகுலின் ட்விட்டர் கணக்கை, அந்நிறுவனம் முடக்கியது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட பின்னர் மாணிக்கம் தாகூர், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜிதேந்திரா சிங் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கும் இன்று முடக்கப்பட்டது.