தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாங்க திரும்பி வருவோம்... ஒடிசாவில் தூம் பட பாணியில் திருட்டு... - we will return coming soon

ஒடிசாவில் உள்ள பள்ளியில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை திருடிய திருடர்கள், "நாங்க திரும்பி வருவோம்" என்று எழுதிவைத்து சென்றுள்ளனர்.

இது தூம்- 4 நாங்க திரும்பி வருவோம்- ஒடிசாவில் திருடன் எச்சரிக்கை
இது தூம்- 4 நாங்க திரும்பி வருவோம்- ஒடிசாவில் திருடன் எச்சரிக்கை

By

Published : Jul 5, 2022, 11:02 AM IST

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று (ஜூலை 4) கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் திருடப்பட்டன. அதோடு பள்ளியில் உள்ள வகுப்பறை கரும்பலகைகளில் Its me Dhoom-4, we will return coming soon என்று எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்தை சிலர் சமூக வலைதளங்களில் தூம் திரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில், "பள்ளி தலைமை ஆசிரியரின் அறையிலிருந்த கணினிகள், பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின், எடை பார்க்கும் எந்திரம், ஸ்பீக்கர் பெட்டிகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.


இதையும் படிங்க:கேஸ் ஸ்டவ் முதல் குக்கர் வரை... வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் திருடிய திருடர்கள்!

ABOUT THE AUTHOR

...view details