தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லைக் காவல் படையினருக்கு சல்யூட் அடித்த 5 வயது சிறுவன் - சமூக வலைதளங்களில் வைரஸ்

இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினருக்கு, 5 வயது சிறுவன் சல்யூட் வைத்த காட்சி சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

சல்யூட் அடித்த சிறுவன்
சல்யூட் அடித்த சிறுவன்

By

Published : Nov 15, 2020, 10:55 PM IST

ஜம்மு காஷ்மீரில் லடாக் பிராந்தியத்தில், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை வீரர்களுக்கு நவாங்க் நம்கியால் எனும் 5 வயது சிறுவன் ஐடிபிபி வீரர்களைப் போன்று உடை அணிந்து, சல்யூட் அடித்த காட்சி பலரைக் கவர்ந்து வருகிறது.

இந்த வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, "மகிழ்ச்சியாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் உள்ளது. லடாக் அருகே உள்ள கிராமத்தில், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை வீரர்களுக்கு, 5 வயதான எல்.கே.ஜி பயிலும் சிறுவன் நவாங் நம்கியால் சல்யூட் அடிக்கும் காட்சி" என குறிப்பிட்டுள்ளது.

பலரது மனதை கவர்ந்துவரும் நவாங்க், லடாக் பிராந்தியத்தின் சுஷுல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரின் மகன் ஆவார். முன்னதாக இதேபோன்று எல்லைக் காவல்படையினருக்கு, சிறுவன் ஒருவன் சல்யூட் அடித்த காட்சி இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க:

கரோனாவை எதிர்த்து போராட மாட்டு சாணத்தில் மாஸ்க்குகள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details