பருவ நிலை மாற்றம் என்ற சிக்கலை எதிர்கொள்ள சர்வதேச நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியா சார்பில் 'சர்வதேச சோலார் கூட்டணி' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அட்ச ரேகை, தீர்க ரேகை ஆகியவற்றுக்குள் உள்ள 120 நாடுகளை சேர்த்து இந்த அமைப்பை இந்தியா முன்னெடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியா-இத்தாலி நாடுகள் கூட்டாக செயல்திட்டத்தை உருவாக்கி, அதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்த்தன் சிரிங்கலா, இத்தாலி சார்பில் அந்நாட்டின் தூதர் வின்சென் டி லூகா ஆகியோர் இந்த ஒப்பத்தில் கையெழுத்திட்டனர்.