ஜோத்பூர் : ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்த கட்சி காங்கிரஸ் எனக் கூறியுள்ள நிலையில் அவருக்கு எதிர்கருத்தை நரேந்திர சிங் தோமர் முன்வைத்துள்ளார்.
மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சனிக்கிழமை (ஏப்.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ ஜனநாயகத்தின் மீது குரல் எழுப்ப எந்த காங்கிரஸ் தலைவருக்கும் தார்மீக உரிமை இல்லை.
ஏனென்றால் சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை குலைக்கும் பாவத்தை யாராவது செய்திருந்தால் அது இந்திரா காந்திதான். முழு உலகமும் அதற்கு சாட்சியாக இருந்தது. காங்கிரஸின் பொய்யான குற்றச்சாட்டுகளை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.