தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துணை முதலமைச்சர் அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார்

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு சொந்தமான தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/02-November-2021/13527181_258_13527181_1635837013713.png
http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/02-November-2021/13527181_258_13527181_1635837013713.png

By

Published : Nov 2, 2021, 5:01 PM IST

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு சொந்தமான, தொடர்புடைய ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை தன்வசம் இணைத்துள்ளது(attached by IT dept).

கடந்த மாதம் பவார மற்றும் அவரின் தொடர்புடையவர்களிடம் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில், மும்பையில் உள்ள நிர்மல் டவர், கோவாவில் உள்ள ரிசார்ட், தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, சர்க்கரை ஆலை உள்ள 27 இடங்களில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகதி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணி அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

தற்போது துறை முதலமைச்சர் அஜித் பவாருக்கு எதிராகவும் நடவடிக்கை பாய்ந்துள்ளது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:புனித் மரணத்திற்கு பின் மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details