தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தாண்டை புது செயற்கைக்கோளுடன் தொடங்கும் இஸ்ரோ! - நாசா ஆய்வு மையம்

ISRO: 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக எக்ஸ்-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள் (XPoSat) நாளை(ஜன.1) விண்ணில் ஏவ ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

புது ராக்கெட் அனுப்பி 2024புத்தாண்டை வரவேற்கும் இஸ்ரோ
புது ராக்கெட் அனுப்பி 2024புத்தாண்டை வரவேற்கும் இஸ்ரோ

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 9:09 PM IST

ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரப் பிரதேசம்): 2023ஆம் ஆண்டு இந்தியாவின் ஆண்டாக மாறியது என்று சொல்லும் அளவிற்கு வளர்ச்சிகளையும், வெற்றி முகங்களையும் அடுக்கியது இந்தியா. சந்திரயான் 2 திட்டத்தில் தோல்வி கண்ட இந்தியா, சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் உலகளவில் அனைவரின் பார்வையையும் தன்வசப்படுத்தினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

இந்த வெற்றி கொண்டாட்டம் நிறைவடைவதற்கு முன்பே, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும் என்ற தகவலுடன் மற்றொரு கொண்டாட்டத்திற்கும் வழிவகுத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவலின்படி, ஆதித்யா எல்-1 செயற்கைகோளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, தற்போது அதன் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அவ்வப்போது இஸ்ரோ தகவல் தெரிவித்து வருகிறது.

இப்படி 2023ஆம் ஆண்டை தன்வசப்படுத்திய இஸ்ரோ, 2024ஆம் ஆண்டிலும் அதன் வெற்றி நடையை எடுத்து வைக்கும் விதமாக, எக்ஸ்-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள்(XPoSat) நாளை (ஜன.1) விண்ணில் ஏவ ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளது என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி, நாளை (ஜன.1) காலை 9.10 மணியளவில், பிஎஸ்எல்வி செயற்கைகோள் (PSLV-C58) மூலம் எக்ஸ்-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோளானது (XPoSat) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC-SHAR) முதல் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

5 வருட ஆயுள் காலத்தைக் கொண்டுள்ள XPoSat செயற்கைக்கோளின் முதன்மை பேலோடான POLIX (Polarimeter Instrument in X-Rays) ராமன் ஆய்வு நிறுவனம் மூலம் துருவமுனை அளவுருக்களை அளவிடும். அதைத் தொடர்ந்து XSPECT (X-ray Spectroscopy and Timing) பேலோட் பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கதிர்வீச்சு செயல்பாடு மற்றும் வானமூலங்களின் அளவீடுகள் குறித்த முழுமையாக கண்டறிவதற்கு X-ray துருவமுனைப்புகள் பயன்படுகிறது.

விண்வெளியில் உள்ள உள்ளார்ந்த X-ray கதிர்களின் துருவமுனைப்பு குறித்த தகவல்களை ஆய்வு செய்வதே இதன் பயன்பாடு. முன்னதாக அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், கடந்த 2021ஆம் ஆண்டு இதே முயற்சியை முன்னெடுத்தது.

50 காஸ்மிக் மூலங்களிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அலைவரிசை 8-30 keV இல் X-கதிர்களின் துருவமுனைப்பை அளவிடுவதை இந்த திட்டத்தின் நோக்கமாகக் கொண்டதையடுத்து, காஸ்மிக் X-ray கதிர்களின் நீண்ட கால spectral-களையும், தற்காலிக ஆய்விற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இஸ்ரோ அதன் X பக்கத்தில் வெளியிட்டதாவது, "இந்திய நேரப்படி 2024 ஜனவரி 1ஆம் தேதி காலை 9.10 மணியளவில் எக்ஸ்-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோளானது (XPoSat) விண்ணில் ஏவ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC-SHAR) முதல் ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:2023-இல் கொடிகட்டி பறந்த செயற்கை நுண்ணறிவு.. வளர்ச்சியும் எழுச்சியும்!

ABOUT THE AUTHOR

...view details