தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Chandrayaan-3 : நிலவை நெருங்கிய சந்திரயான்-3.. புரபல்சன் உந்துவிசை, விக்ரம் லேண்டரை பிரிக்க இஸ்ரோ திட்டம்!

நிலவின் சுற்றுவட்ட பாதையின் அடுத்த அடுக்கில் சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக வெற்றிகறமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

Chandrayaan-3
Chandrayaan-3

By

Published : Aug 16, 2023, 10:12 AM IST

ஐதராபாத் : நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தின் உயரம் 4வது முறையாக குறைக்கப்பட்டு 100 கிலோ மீட்டர் தொலைவிலான சந்திர அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நாளை (ஆகஸ்ட் 17 ஆம் தேதி) சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் லேண்டர் தனியாக பிரித்து பயணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இன்று (ஆகஸ்ட். 16) நடத்தப்பட்ட 4வது கட்ட நகர்வின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதைக்கு நெருக்கமாக 153 கிலோ மீட்டர் X 163 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னேற்றி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அடுத்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ள அடுத்த முயற்சியில் நிலவுக்கும், சந்திரயான் 3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் இன்னும் குறைக்கப்படும் என்றும் புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் லேண்டர் கருவி தனித்தனியாக பிரிக்க உள்ளதாகவும் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ள இஸ்ரோ, இதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. நிலவின் சுற்றுவட்டபாதையில் அடுக்குகள் குறைப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், அடுத்த கட்டமாக சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த் புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் விக்ரம் லேண்டர் கருவியை தனித் தனியாக பிரித்து நிலவில் தரையிறக்க தேவையான முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

நாளை (ஆகஸ்ட். 17) புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் விக்ரம் லேண்டரை பிரிக்கும் முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 3வது முறையாக குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :நிலவை நெருங்கும் சந்திரயான் 3 - மூன்றாவது முறையாக சுற்றுப்பாதை உயரம் குறைப்பு!

ABOUT THE AUTHOR

...view details