தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 13, 2021, 11:20 AM IST

ETV Bharat / bharat

காற்று, பிளாஸ்மா இயக்கவியலை ஆராய RH-560 செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரோ!

டெல்லி: காற்று, பிளாஸ் இயக்கவியலை ஆராய RH-560 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

சவுண்டிங் ராக்கெட் RH-560-விண்ணில் ஏவிய இஸ்ரோ!
சவுண்டிங் ராக்கெட் RH-560-விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஆர்.ஹெச். (RH) 560 செயற்கைக்கோளை விண்ணில் நேற்று (மார்ச் 13) ஏவியது. இந்த ராக்கெட் நடுநிலைக் காற்று மற்றும் பிளாஸ்மா இயக்கவியல் ஆகியவற்றின் அணுகுமுறை மாறுபாடுகளை கண்டறிய உதவும்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள இஸ்ரோ, “நடுநிலைக் காற்று மற்றும் பிளாஸ்மா இயக்கவியல் ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகளை ஆய்வு செய்ய ராக்கெட் (RH-560) ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

சவுண்டிங் ராக்கெட் RH-560-விண்ணில் ஏவிய இஸ்ரோ!

சவுண்டிங் எனப்படும் ஆய்வு ராக்கெட்டுகள் ஒன்று அல்லது இரண்டு-நிலை திட உந்துவிசை ராக்கெட்டுகள் ஆகும். அவை மேல் வளிமண்டல பகுதிகளை ஆய்வு செய்ய மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...எழுத்தாளர் இமையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்; தலைவர்கள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details