சித்ரதுர்கா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலான தானியங்கி ஏவுகணை தரையிறக்கும் சோதனையை வெற்றிகரமாக செய்து காட்டியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ-வுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ இணைந்து பல்வேறு ராணுவ தளவாட தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்காக, மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலான தானியங்கி தரையிறங்கும் ஏவுகணையை தயரிக்கப்பட்டது. இதற்கான சோதனை விரைவில் நடத்தப்படும் என இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் அண்மையில் நடந்த அறிவியல் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வான் போக்குவரத்து சோதனை மையத்தில் ஏவுகணை சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்திய விமானப் படையின் சின்னோக் வகை ஹெலிகாப்டரில் காலை 7.10 மணிக்கு இந்த ஆர்எல்வி வகை ஏவுகணை பொருத்தப்பட்ட நிலையில், தரையில் இருந்து 4 புள்ளி 5 கிலோ மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.