ஸ்ரீஹரிகோட்டா:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 10.24 மணிக்கு காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள், பிரேசிலின் அமசோனியா -1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களை ஏந்திக் கொண்டு இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி- சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
அமசோனியா -1 என்பது விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் (INPE) ஒளியியல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். பிரேசிலிய பிரதேசத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வேளாண்மையைப் பகுப்பாய்வு செய்வதற்கும், பயனர்களுக்கு ரிமோட் சென்சிங் தரவை வழங்குவதற்கும் இந்தச் செயற்கைக்கோள் உதவுகிறது.