சென்னை:சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1, இன்று (செப்.2) காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட 64ஆவது நிமிடத்தில், 648.71 கி.மீ தொலைவில் பூமியின் தாழ்வு வட்ட பாதையில் வெற்றிகரமாக விடுவிக்கபட்டது.
நாசா, ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளி மையங்கள் வரிசையில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பிய 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 வெற்றி இந்தியா நாடு முழுவதும் எழுந்திருக்கிறது.
நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை இன்று அனுப்பியது. நெருப்பு பந்தான சூரியனை எப்படி விண்கலம் விண்ணில் இருந்து சூரியனை ஆராய போகிறது என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் இஸ்ரோ (ISRO) அதற்குண்டான விளக்கம் அளித்தது. அதாவது, ஆதித்யா எல்-1 விண்கலமானது விண்வெளியில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்ச பாயிண்ட் என்னும் எல்-1 பாயிண்டில் நிலைநிறுத்தி சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தரப்பிலும் மற்றும் பல்வேறு விஞ்ஞானிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுபோய் நிலை நிறுத்தப்படத்தது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியன் நோக்கி நகர்த்தி பயணப்பட தொடங்கும். பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ராஞ்சியன் புள்ளி 1’ என்பது தான் அதன் இலக்கு.
முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 100முதல் 120 நாட்களுக்கு ஆகும் என்று முன்னதாகவே இஸ்ரோ தெரிவித்திருந்தது.