தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இஸ்ரோவின் 2023 ஆம் ஆண்டு திட்டம் - ஒன்வெப்பின் அடுத்த தொகுப்பு தயார் - செயற்கைக்கோள்களின் முதல் தொகுப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எல்விஎம் 3 ராக்கெட் இன் முக்கியமான ஒன்வெப் 36 செயற்கைக்கோள்களின் அடுத்த தொகுப்பை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது.

Etv Bharatஇஸ்ரோவின் 2023 ஆம் ஆண்டு திட்டம் - ஒன்வெப்பின் அடுத்த தொகுப்பு தயார்
Etv Bharatஇஸ்ரோவின் 2023 ஆம் ஆண்டு திட்டம் - ஒன்வெப்பின் அடுத்த தொகுப்பு தயார்

By

Published : Oct 31, 2022, 1:14 PM IST

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் எல்விஎம்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் சில தினங்களுக்கு முன்விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனையடுத்து தற்போது இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்டட் லிமிடெட்டின் ஒன்வெப்-36 செயற்கை கோள்களின் அடுத்த தொகுப்பை 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இஸ்ரோவின் ஆராய்ச்சி கழகம் வெளியிட்ட தகவலின் படி, ‘மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தின் உயர் மட்ட சோதனை தளத்தில் CE-20 இன்ஜினின் சோதனை 25 வினாடிகளுக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் ஒன்வெப் இந்தியா-1 செயற்கைக்கோள்களின் அடுத்த 36 செயற்கை கோள்களை ஏவுவதற்காக தயார் செய்யப்பட்ட LVM3-M3 பணிக்காக இந்த என்ஜின் மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. LVM3 ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினின் மேல் நிலைய ஆனது (C25 நிலை) திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் (LOX-LH2) உந்துசக்தி கலவையுடன் வேலை செய்யும் CE-20 இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. இந்த இயந்திரம் வெற்றிடத்தில் 186.36 kN அளவான் உந்துதலை உருவாக்குகிறது.

இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) ஒன்வெப் நிறுவனத்துடன் இரண்டு கட்டங்களாக 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக ஏவுகணைக் கட்டணமாக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக ஒன்வெப் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்தார்.

ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுகணை எம்கே -3 (GSLV MkIII) என அழைக்கப்படும் LVM3 ராக்கெட் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 36 செயற்கைக்கோள்களின் முதல் தொகுப்பு அக்டோபர் 23 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஒன்வெப்பின் இணைய சேவைகளை உலகம் முழுவதும் வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) 648 செயற்கைக்கோள்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனம் MkIII (GSLV MkIII) என்றும் அழைக்கப்படும் LVM3 ராக்கெட் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் துறைமுகத்தில் இருந்து 36 செயற்கைக்கோள்களின் முதல் தொகுப்பு அக்டோபர் 23 அன்று வெற்றிகரமாக நடந்தது. ஒன்வெப் தனது பிராட்பேண்ட் சேவைகளை உலகம் முழுவதும் வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) 648 செயற்கைக்கோள்களின் தொகுப்பைக் கொண்டிருக்க திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எல்விஎம் 3’ ராக்கெட்... சாதனை படைத்த இஸ்ரோ...

ABOUT THE AUTHOR

...view details