டெல்லி: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. திட்டமிட்டபடி ஆய்வுப் பணிக்கான அடிப்படை நிலைகளைக் கடந்துள்ள சந்திரயான் - 3 விண்கலம் கடந்த 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்ததோடு, அதனைப் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
மேலும், சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி பணிகளைச் செய்து வருவதாகவும் வரும் 23-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கும்(Soft Landing) செய்யவுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இதனிடையே, டெல்லியில் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்,"சந்திரயான் - 3 விண்கலம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. விண்கலமானது 100 கிமீ என்ற தூரத்திலான சுற்றுப்பாதையில் இருந்து நிலவுக்கு அருகில் செல்ல தொடங்கும் போது தான் சுற்றுப்பாதையைத் தீர்மானிக்கும் செயல்முறை நடக்கும்.
இதையும் படிங்க: கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!