டெல்லி:சந்திரயான் 3 மகா வினாடி வினாவில் மக்களை பங்கேற்குமாறு இஸ்ரோ தலைவர் எஸ் சோமனாத் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் MyGov.in. எனும் அரசு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத், நாட்டின் வெற்றிகரமான சந்திரப் பயணத்தைக் கொண்டாடவும், விண்வெளி சாதனைகளைப் பற்றி அறியும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கிலும் சந்திரயான் 3 மகா வினாடி வினா நடத்தப்படுவதாகவும் எனவும் இதில் பங்கேற்குமாறும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சந்திரயான் 3 குறித்து மாணவர்கள் மேலும் தெரிந்துகொள்ள ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டு 10 (MCQ) கொள்குறிவகை வினாக்கள்(Multiple choice) கொண்ட சந்திரயான் 3 மகா வினாடி வினா நடத்தப்படுகிறது. இந்த 10 MCQ கேள்விகள் 5 நிமிடங்கள் அல்லது 300 வினாடிகளுக்குள் முயற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் X தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “MyGov என்பது விண்வெளி குறித்த வினாடி வினா திட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடிய ஒரு தளம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே மறக்காமல் mygov.in ஐ லாகின் செய்து வினாடி வினா போட்டியில் பங்கேற்று எங்களை ஆதரியுங்கள், எங்களை ஊக்குவித்து உத்வேகம் பெருங்கள்” என கூறியுள்ளார்.