இஸ்ரோ தலைவர் சிவன், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழ சரக்கல்விளை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம்செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று (பிப். 5) இரவு திடீரென்று அவரது சொந்த ஊரான கீழ சரக்கல்விளை வந்தார். பின்னர் ஊரில் உள்ள இவரது குடும்ப கோயிலான பத்திரகாளியம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம்செய்தார்.
இஸ்ரோ தலைவர் சிவன் சொந்த ஊரில் சாமி தரிசனம்! - ISRO Chairman Sivan
கன்னியாகுமரி: இஸ்ரோ சார்பில் 28ஆம் தேதி ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், அதன் தலைவர் சிவன் அவரது சொந்த ஊரில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.
கன்னியாகுமரி
இஸ்ரோ சார்பில் வரும் பிப். 28ஆம் தேதி விண்ணில் புதிய ராக்கெட் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலூர் நறுவீ மருத்துவமனையைத் திறந்துவைத்த எடப்பாடி பழனிசாமி!