கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளைஞர் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்தார். அவர் நாதன் லெவி என்ற 29 வயது இளைஞர் எனக் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் செப்டம்பர் 27ஆம் தேதி டார்ஜிலிங்கில் உள்ள சந்தக்பூவுக்கு வந்து தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டார்ஜிலிங் மாஜிஸ்திரேட் பொன்னம்பலன் "வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சந்தக்பூ ஹோட்டலில் இறந்திருப்பதாகவும், அவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.