தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Ramadan: ரம்ஜான் குறித்து இஸ்லாம் கூறும் அர்த்தம் என்ன! - Ramzan

இஸ்லாத்தின் சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் ரம்ஜான் 9 வது மாதம் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மத்தின் புனித மாதமாகவும் கருதப்படுகிறது. இறை தூதர் முகமது நபிக்கு திருக்குரானில் ஏற்பட்ட முதல் வெளிப்படுத்துதலை நினைவு கூறும் விதமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Ramadan 2023
Ramadan 2023

By

Published : Apr 21, 2023, 7:41 AM IST

ஐதராபாத் : இஸ்லாமிய நாட்காட்டியில் வரும் 9வது மாதமான ரம்ஜான், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாயந்த மாதமாக கருதப்படுகிறது. ஒரு மாதம் நோன்பு, பிரார்த்தனை மற்றும் சிந்தனை ஆகியவற்றை கொண்டு ரம்ஜான் மாதம் குறிக்கப்படுகிறது.

ரம்ஜான் மாதம் ஒருவரின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், சுய சிந்தனை மற்றும் இறை நம்பிக்கை மூலம் இறைவன் உடனான உறவை ஆழப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கிறது. ரம்ஜான் மாதத்தில் இறை நம்பிக்கையாளரகள் நோன்பு அனுசரிக்கின்றனர். மாதத்தின் 30 நாட்களிலும் விடியற் காலையில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து தங்கள் இறை நம்பிக்கையை வலுப்படுத்துகின்றனர்.

பொழுது விடிவதற்கு முன், மக்கள் செஹ்ரி என்ற உணவை உண்கின்றனர், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, இஃப்தார் என்று அழைக்கப்படும் உணவை உண்டு தங்கள் நோன்பை மக்கள் நிறைவு செய்கின்றனர். ரம்ஜான் நோன்பில் செஹ்ரி உணவு முக்கியத்தக்க உணவாக கூறப்படுகிறது.

விடியலுக்கு முன் இஸ்லாமியர்கள் இந்த உணவை எடுத்துக் கொண்டு தங்கள் நோன்பை துவங்குகின்றனர். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது ஒரு மாத நோன்பிற்காக அதிகாலையில் எழுந்து செஹ்ரி உணவுகளை சாப்பிட தயாராகின்றனர். நடப்பாண்டில், இந்தியாவில் மார்ச் 23 ஆம் தேதி ரம்ஜான் நோன்பு தொடங்கியது.

இதையும் படிங்க :வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்.. பீர் வேண்டாம் மோர் குடிங்க.. மருத்துவர்கள் கூறும் சம்மர் டிப்ஸ்!

இஸ்லாமிய மதத்தின் சந்திர நாட்காட்டியின் படி இன்று (ஏப். 21) அல்லது நாளை (ஏப். 22) நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரம்ஜான் மாதத்தின் நிறைவை குறிக்கும் வகையில் ஈத் உல் பிதர் எனக் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஈத் உல் பிதர் இன்று (ஏப். 21) அல்லது நாளை (ஏப். 22) இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புனித குரானின் முதல் வசனங்களை இறை தூதர் முகமது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ரம்ஜானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுகை செய்கின்றனர். புனித நூலான திருக்குரானை படிக்க இஸ்லாமியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இஸ்லாம் மதத்தை பொறுத்தவரை தொண்டு செய் என்பதை ஊக்குவிக்கும் மாதமாக ரம்ஜான் மாதம் நினைவு கூறப்படுகிறது. அதை முன்னிட்டு மசூதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் பல்வேறு விதமான தொண்டுகளை செய்து வருகின்றனர். மேலும் ரம்ஜானை முன்னிட்டு தொண்டு அமைப்புகள் மூலம் உணவு, நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இயலாதவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க :பொள்ளாச்சி என்னாச்சு? கொடநாடு சம்பவம் என்ன ஆச்சு? சட்டப்பேரவையில் ஆவேசமான முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details