நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அவரது உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 23ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்து வைத்தார்.
குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பக்கம் இதுதொடர்பான புகைப்படங்கள் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகின. ஆனால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தது சுபாஷ் சந்திரபோஸின் படம் இல்லை.
போஸ் படமில்லை என்ற தரப்பின் ட்விட்டர் பக்கம் அப்படம் கும்னாமி என்ற பெங்காலி திரைப்படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடித்த, நடிகர் புரொசென்ஜித் சாட்டர்ஜியின் படம் என ஒரு தரப்பினர் கூறினர்.
போஸின் படம்தான் எனக்கூறும் தரப்பின் ட்விட்டர் பக்கம் இந்நிலையில், கும்னாமி படத்தில் இடம்பெற்றிருக்கும் சாட்டர்ஜியின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இதுதான், அத்திரைப்படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் வேடமிட்டு நடித்த பானர்ஜியின் புகைப்படம்.
குடியரசுத் தலைவர் திறந்துவைத்தது சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படம்தான். தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் சர்ச்சை கிளப்பப்படுகிறது என மற்றொரு தரப்பினர் பதிவிட்டுவருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில், இதுவரை குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்படவில்லை.