புதுடெல்லி: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த திருமண பார்ட்டி ஒன்றில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், “ராகுல் காந்தியின் அருகில் நிற்பவர்கள் பாட்டிலில் ஏதோ பருகும் காட்சிகள் உள்ளன. இதை பாஜகவினர் சர்ச்சையாக்கிவருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “நண்பர் ஒருவரின் தனிப்பட்ட திருமண விழாவில் பங்கேற்பதற்காக நட்பு நாடான நேபாளத்திற்கு ராகுல் காந்தி சென்றார். திருமண நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது நமது கலாசாரம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “திருமணத்தில் கலந்துகொள்வது நமது நாட்டில் இன்னமும் குற்றமாகவில்லை.
ஒருவேளை இதற்கு பிறகு திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என பாஜக முடிவு செய்யலாம். இதனால் நண்பர்களின் திருமண விழாவில் கலந்துகொள்ளும் கலாசார நிகழ்வை நாம் மாற்ற முடியும்” என்றார். ராகுல் காந்தி சர்ச்சைக்குள்ளான வீடியோவை முதலில் காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டது.