தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரட்டை இலை முடங்குகிறதா? - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் காரசார பதில் - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் காரசார பதில்

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் அலுவலர் தான் முடிவு எடுப்பார் எனவும், ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ அல்லது முறைப்படுத்துவதோ தங்களின் பணி அல்ல எனவும் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Is Double leaf paralysis  The Election Commissions response to the Supreme Court
Is Double leaf paralysis The Election Commissions response to the Supreme Court

By

Published : Feb 3, 2023, 2:15 AM IST

டெல்லி:அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தனது கையெழுத்தை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஈபிஎஸ் மனுவுக்கு பதில் மனு அளித்துள்ள தேர்தல் ஆணையம், பொதுக்குழு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் அலுவலர் தான் முடிவு எடுப்பார் எனவும், ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ அல்லது முறைப்படுத்துவதோ தங்களின் பணி அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி தங்களை யாரும் அணுகவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இதையும் படிங்க: தென்காசி காதல் திருமண விவகாரம் - கணவர் பரபரப்பு வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details