தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தைகளிடம் பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் என்ன?

பெருந்தொற்று காலத்தில் பிறந்த குழந்தைகள், தொடர்பு கொள்ளும் திறன், உடல் இயக்கத் திறன் உள்ளிட்ட சில திறன்களில் அவர்களுக்கு முன் பிறந்த குழந்தைகளை விட சற்று பின்தங்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

baby health
baby health

By

Published : Jan 14, 2022, 4:42 PM IST

புகழ்பெற்ற சர்வதேச நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் மூளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

பெருந்தொற்று காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள், அதற்குப் பின் பிறந்த குழந்தைகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெரும்பாலான குழந்தைகள் இயல்பாக நலமுடன் உள்ள நிலையில், பெருந்தொற்று காலத்தில் பிறந்த குழந்தைகள், தொடர்பு கொள்ளும் திறன், உடல் இயக்கத் திறன் உள்ளிட்ட சில திறன்களில் அவர்களுக்கு முன் பிறந்த குழந்தைகளை விட சற்று பின்தங்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இக்குழந்தைகளின் பெற்றோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா என்று பாராமல், பெருந்தொற்று கால சூழலே இந்த குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், பல இளம் தம்பதிகள் சமூகத்துடன் சேர்ந்து இயங்க முடியாமல் தனிமையில் காலத்தை கழிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

மேலும், பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுபடி, பெருந்தொற்று காலத்தில், குழந்தைகளின் பேச்சு, பார்வை, இயக்கத்திறன் சரிவு கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த குழந்தைகளை விட பெருந்தொற்று காலத்தில் உள்ள குழந்தைகளின் IQ திறன் இரண்டு படி குறைவாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பாதிப்பானது குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களில் அதிகம் காணப்படுவதாகவும், சிறுமிகளைவிட சிறுவர்களுக்கே பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. பெருந்தொற்று காலம் நீட்டிக்கும் போது அதன் தாக்கமும் குழந்தைகள் மத்தியில் கூடும்.

பெருந்தொற்று குழந்தைகளிடம் நேரடியாக தாக்கத்தை குறைந்த அளவிலேயே ஏற்படுத்தியிருந்தாலும், இதுபோன்ற மறைமுக விளைவுகளையும் உருவாக்கியுள்ளது ஆய்வில் வெளிவந்துள்ளது.

பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணிகள் சந்தித்துள்ள அழுத்தங்கள் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. அதேவேளை இந்த பின்னடைவை குழந்தைகள் எதிர்கொண்டு வளரும் காலத்தில் அதை சீர் செய்துகொள்வார்கள் என குழந்தைகள் மனநல மருத்துவர் மோரியா தோமாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆயுட்காலம் அதிகரிக்க இதை பின்பற்றுங்க!

ABOUT THE AUTHOR

...view details