தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழிலாளர்களிடம் லஞ்சம் - ஐ.ஆர்.எஸ் அலுவலர் கைது - கோட்டா

கோட்டாவில் ஓபியம் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் லஞ்சம் வாங்கிய ஐஆர்எஸ் அலுவலரை ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பணியகம் கைது செய்துள்ளது.

ஐ.ஆர்.எஸ் அலுவலர் கைது
ஐ.ஆர்.எஸ் அலுவலர் கைது

By

Published : Jul 18, 2021, 10:43 AM IST

ராஜஸ்தான்: இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அலுவலர் சஷாங்க் யாதவ் (38). இவர் உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் உள்ள ஒரு அரசாங்க ஓபியம் தொழிற்சாலையின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அபின் தொழிற்சாலையில் கூடுதல் பொறுப்பில் பணியாற்றினார்.

தற்போது, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் ரூ.16,32,410 ரொக்கப்பணம் குறித்த விவரங்களை கொடுக்காததால், சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.

தற்போது தொழிலாளர்களிடம் தலா ரூ .60,000 முதல் 80,000 வரை லஞ்சம் பெற்றதாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது ரூ .15 லட்சம் பணம், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இவர் தொழிலாளர்களிடம் இருந்து ரூ.36 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பி.ஹெச்டி மாணவியிடம் லஞ்சம்- பேராசிரியைக்கு 3 ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details