தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாரியில் இருந்து விழுந்த இரும்புத்தகடுகள் - பாதசாரிகள் இருவர் உயிரிழப்பு - கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில்

கேரள மாநிலத்தில் இன்று (செப்-16) காலை லாரி ஒன்றில் இருந்து விழுந்த இரும்புத்தகடுகள் சாலையில் சரிந்தபோது, இரண்டு பாதசாரிகள் மீது விழுந்து, அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 16, 2022, 10:02 PM IST

திரிசூர்:கேரள மாநிலம், திரிசூர் மாவட்டத்தில் இன்று காலை லாரியில் இருந்து இரும்புத்தகடுகள் விழுந்ததில் இரண்டு பாதசாரிகள் உயிரிழந்தனர்.

இன்று (செப் - 16) காலை 6.30 மணியளவில் சாவக்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அகலாட் பள்ளிக்கு முன்பாக இச்சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அகலாடு பகுதியைச்சேர்ந்த முஹம்மது அலி ஹாஜி (70) மற்றும் ஷாஜி (45) என்பது தெரியவந்துள்ளது.

கோழிக்கூட்டில் இருந்து எர்ணாகுளம் நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தபோது, அதில் இருந்து திடீரென இரும்புத்தகடுகள் அறுந்து விழுந்தன. அந்த நேரத்தில் அருகே சாலையில் நடந்துசென்று கொண்டிருந்த இருவர் மீது இரும்புத் தகடுகள் விழுந்துள்ளன. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.

இதையும் படிங்க:பதைபதைக்கும் வீடியோ... சீனாவில் பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்...

ABOUT THE AUTHOR

...view details