தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

india vs ireland t20:இளம் தலைமுறையுடன் களம் இறங்கும் இந்திய அணி அதிரடி காட்டுமா... - cricket news in tamil

இந்திய மற்றும் அயர்லாந்து அனிகள் மோதும் முதல் டி20 போட்டி டப்ளின் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இளம் தலைமுறையுடன் களம் இறங்கும் இந்திய அணி அதிரடி காட்டுமா...
இளம் தலைமுறையுடன் களம் இறங்கும் இந்திய அணி அதிரடி காட்டுமா...

By

Published : Aug 18, 2023, 4:54 PM IST

Updated : Aug 18, 2023, 5:09 PM IST

ஹைதரபாத்:ஆசிய கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டப்ளின் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா,ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்திப் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அடுத்த தலைமுறை வீரர்களாக கருதப்படும் ஐபிஎல் நட்சத்திரங்களாக கருததப்படும் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங்,ஜிதேஷ் சர்மா உள்ளிட்டோருடன் இந்திய அணி நிரம்பி உள்ளது.இத்தொடருக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.

இதன் மூலம் இந்திய அணியை வழிநடத்தும்,முதல் வேகப்பந்து வீச்சாளரார் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.இதற்கு முன்னதாக விரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி,சுரேஷ் ரெய்னா,அஜிங்க்யா ரஹானே,விராட் கோலி, ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரிஷப் பண்ட்,ஹர்திக் பாண்டியா,கேஎல் ராகுல் ஆகியோர் இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர்.

ஜஸ்பிரித் பும்ரா இந்திய கிரிகொட் அணியின் 11 வது கேப்ட்டன் என்பது குறிப்பிடதக்கது.இதனால் இன்று நடைபெறும் போட்டியில் அனைவரது பார்வையும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்ல. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 11 மாதங்களுக்குப் பிறகு களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற தொடரின் போது பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், காயத்தில் இருந்து குணமடைந்து தற்போது முழு பலத்துடன் பந்து வீச ஆயத்தமாகி உள்ளார்.

இதுவரை,இந்திய மற்றும் அயர்லாந்து அணிகள் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 5 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியை தற்போது பும்ரா தலைமையிலான இந்திய அணி தக்க வைத்துக் கொள்ளுமா என்று பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அணியின் வீரர்கள் பட்டியல்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), முகேஷ் குமார், ஆவேஷ் கான், ஜித்தேஷ் சர்மா, பிரஷித் கிருஷ்ணா, ஷாபாஸ் அகமது.

அயர்லாந்து: ஆண்ட்ரூ பல்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட், ஃபியோன் ஹேண்ட், கிரேக் யங், தியோ வான் வோர்கோம், ரோஸ் அடார்.

இதையும் படிங்க:ஃபிடே உலக கோப்பை செஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

Last Updated : Aug 18, 2023, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details