ஹைதராபாத்: ரயில்களில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் பொதுவாக இரவு நேர பயணத்தையே விரும்புவார்கள். பகலில் இருக்கும் வெயில், இரைச்சல் ஏதுமின்றி, நன்றாக உறங்கலாம் என்பதற்காகவே இரவு நேர பயணத்தை தேர்வு செய்வார்கள். ஆனாலும், இரவு நேர பயணம் அந்த அளவுக்கு இனிமையாக இருந்துவிடுவதில்லை. அருகில் இருக்கும் சக பயணிகள் செல்போனில் பேசுவது, அரட்டை அடிப்பது, மின்விளக்குகளை எரிய விடுவது போன்ற தூங்குவதற்கு இடையூறான செயல்களில் ஈடுபடுவார்கள். இதனை தவிர்க்க முடியாது.
இனி நீங்க ஹேப்பியா டிராவல் பண்ணலாம்..ரயில்வேயின் புது ரூல்ஸ்! - indian railway
ரயில் பயணிகள் இரவில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் சொளகரியமாக பயணத்தை மேற்கொள்ள, ரயில்வே நிர்வாகம் சில விதிகளை கொண்டு வந்துள்ளது.
ஐஆர்சிடிசி
இது போன்ற இடையூறுகள் இல்லாமல், பயணிகள் இரவில் சொளகரியமாக பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக, ரயில்வே நிர்வாகம் சில விதிகளை கொண்டு வந்துள்ளது. அதில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகளை குறிப்பிட்டுள்ளது.
- சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவில் செல்போனில் சத்தமாக பேசக்கூடாது, சத்தமாக பாடல்களை கேட்கக் கூடாது.
- சக பயணிகளை தொந்தரவு செய்யும் வகையில் கூட்டமாக அமர்ந்து பேசக்கூடாது.
- இரவு 10 மணிக்கு மேல் நைட் லேம்ப் தவிர வேறு எந்த விளக்கையும் ஏற்றக்கூடாது. மாறாக விளக்கை ஏற்ற வேண்டுமெனில், சக பயணிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
- பயணிகள் மட்டுமல்லாமல் டிக்கெட் பரிசோதர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்
- டிக்கெட் பரிசோதர்கள் இரவு 10 மணிக்கு மேல் பயணிகளிடம் டிக்கெட் கேட்கக் கூடாது.
- இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, பயணிகள் அவர்களுடைய இருக்கையில் மட்டுமே அமர வேண்டும், பிற படுக்கைகளில் அமரக்கூடாது.
- மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில், பிற படுக்கைகளையும் பயன்படுத்தலாம், அதற்கு சக பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்.
- ரயில்வேயின் இந்த விதிகளை யாரேனும் மீறினால், அது தொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளிக்கலாம்.
இதையும் படிங்க: ட்விட்டரில் புது வசதி அறிமுகம் - அதிலும் ட்விஸ்ட் கொடுத்த எலான் மஸ்க்!