தமிழ்நாடு

tamil nadu

சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார் சுபோத்குமார் ஜெய்ஸ்வால்

By

Published : May 26, 2021, 7:20 PM IST

சிபிஐ-யின் புதிய இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Subodh Kumar Jaiswal
Subodh Kumar Jaiswal

நாட்டின் பிரதான புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின்(மத்திய புலனாய்வு அமைப்பு) புதிய இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் இன்று (மே 26) பொறுப்பேற்றுக் கொண்டார். இவரின் நியமனத்தை மத்திய அரசு நேற்றிரவு அறிவித்தது.

புதிய இயக்குநரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, எதிர்க்கட்சியான காங்கிரஸின் மக்களவைக்குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோரின் குழு, மே.24ஆம் தேதி கூடி ஆலோசனை செய்தது.

பத்துப் பேரின் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையான சிஎஸ்ஐஎஃப் (CISF) தலைவராக இருந்தவந்த சுபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மகாராஷ்டிரா மாநில காவல் தலைவராகவும் ரா உளவுத்துறையிலும் பணிபுரிந்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சுபோத்குமார் ஜெய்ஸ்வால் இரண்டு ஆண்டுகள் சிபிஐ இயக்குநர் பதவியில் இருப்பார்.

இதையும் படிங்க:புத்த பூர்ணிமா நாளின் சிறப்பு என்ன?

ABOUT THE AUTHOR

...view details