மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் புதிய இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ புதிய இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் தேர்வு - சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் தேர்வு
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் புதிய இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் தேர்வாகியுள்ளார்.
புதிய இயக்குநரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு நேற்று (மே.24) கூடி ஆலோசனை செய்த நிலையில், இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என் வி ரமணா, எதிர்க்கட்சியான காங்கிரசின் மக்களவைக்குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையான சிஎஸ்ஐஎஃப் (CISF) தலைவராக இருந்தவந்த சுபோத்குமார் மும்பை காவல் ஆணையராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சுபோத்குமார் ஜெய்ஸ்வால் இரண்டு ஆண்டுகள் சிபிஐ இயக்குநர் பதவியில் இருப்பார்.
TAGGED:
New CBI Director