தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார் - எல்லையில் ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக்கொலை

எல்லைப் பகுதியான உரி அருகே ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டார்.

Jammu and Kashmir
Jammu and Kashmir

By

Published : Feb 11, 2021, 2:12 PM IST

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற நபரை சுட்டுக்கொன்றதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் உள்ள ரிவான்ட் நலா பகுதியில் இருவர் ஊடுருவ முயன்றது அங்கிருந்த கண்காணிப்பு கருவி மூலம் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது. அப்போது ஊடுருவ முயன்ற சஃப்ராஸ் மிர் என்ற 56 வயது நபர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் 30க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டை மூலம் இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முசாபராபாத் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. ஊடுருவ முயன்ற மற்றொரு நபரை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சீன எல்லையில் அமைதி திரும்ப முழு நடவடிக்கை - மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details