ஹைதராபாத்: பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவை ரயில்வே சேவைதான், இதில்தான் பயணக் கட்டணம் குறைவு, பாதுகாப்பு அதிகம், தொலைதூர பயண வசதி என பல வசதிகள் உள்ளன.
ரயில் சேவையை பொறுத்தவரை முன்பதிவு செய்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது, ரயில் கிளம்பும் ஐந்து நிமிடத்திற்கு முன்புகூட இருக்கை பார்த்து அமர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் அதிகம் சிக்கிக்கொள்பவர்கள் முன்பதிவு செய்யப்படாத ஜென்ட்ரல் கோச் பயணிகள்தான்.
இந்த பொதுப்பெட்டியில் பயணிப்பவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னமே வந்து வரிசையில் நின்று பயணச்சீட்டுகளை வாங்கிச் செல்ல வேண்டும். சிலர் இதுபோன்ற காரணத்தால் பயணிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.