உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பெற்ற தீவிரமாக களத்தில் செயல்பட்டுவருகிறது. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவரும் நிலையில் இடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு பிரத்தியே பேட்டி அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில செய்தி பிரிவு தலைவர் அலோக் திரிபாதியிடம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியில் சமாஜ்வாதி கட்சி, ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட முன்னணி விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்று கட்ட வாக்குப்பதிவுக்குப்பின் தங்களின் கட்சியின் நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மக்கள் தேசிய உணர்வுக்கும், வளர்ச்சிக்கும், நல்ல நிர்வாகத்திற்கும் பாஜக சிறந்த தேர்வு என நினைக்கிறார்கள். சாதி, மதம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்கி வளர்சியை அளிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். முதல் மூன்று கட்ட வாக்குப் பதிவிலும் இது பிரதிபலித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உங்களை புல்டோசர் பாபா என கேலி செய்கிறாரே. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
சமாஜ்வாதி கட்சியின் வரலாறு என்பது மிகவும் மோசமாகவுள்ளது. 2013ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச ஆட்சிக் கட்டிலில் சமாஜ்வாதி அமர்ந்த பின் மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் திரும்ப பெறத் தொடங்கியது. அக்கட்சி வாக்கு வங்கி அரசியலுக்காக இதுபோன்ற நடவடிக்கையை தொடர்ந்து செய்துவருகிறது.
அன்மையில் அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தண்டனைக்குள்ளான நபர்களில் ஒன்பது பேர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அதில், ஒரு நபரின் தந்தை சமாஜ்வாதி கட்சியின் பிரமுகர். அனைத்து விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் அகிலேஷ் இந்த, விவகாரம் குறித்து மௌனம் காப்பது ஏன்.
நான்கு முறை ஆட்சியிலிருந்த சமாஜ்வாதி கட்சி ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் போன்ற எந்த தரப்புக்கும் நலன் தரும் விதம் செயலாற்றவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் மீது அவர்களுக்கு கரிசம் உள்ளது. சமாஜ்வாதி ஆட்சியில் மாபியாக்கள் அச்சமின்றி உலாவுவார்கள். ஆனால், பாஜக ஆட்சியோ கிரிமினல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அடுத்த ஆட்சியிலும் இந்த நடவடிக்கை தொடரும் என உறுதியளிக்கிறேன்.