ஹைதராபாத்:மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய மொழி சைகை மொழி. சைகை மொழி என்பது பலவிதமான கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளதை போலவே சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி ,பிரிட்டிஷ் சைகை மொழி என பல வகைகள் உள்ளன.
1951ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில், முதன்முதலில் 2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் செப்டம்பர் 23 சைகை மொழி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த சைகை மொழி உலகெங்கிலும் உள்ள சிறப்பு திறன்கள் கொண்ட மக்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது.
உலக மக்கள்தொகையில் 20% மக்களுக்கு லேசான செவித்திறன் குறைபாடும், கிட்டத்தட்ட 5% மக்களுக்கு சற்று தீவிர செவித்திறன் குறைபாடும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகமக்கள் தொகையில் 18 சதவீதமும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2.21% அதாவது மூன்றுகோடி மக்களும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களுள் பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 26% உள்ளனர், அதில் 29% பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் ஆகும்.
சைகை மொழிகள் ஏன் முக்கியம்:உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் தங்கள் காது கேளாத குழந்தைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளுவது என்று தெரியவில்லை என்று ஆராய் சில கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் சைகை மொழியை பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என்பதுதான். காதுகேளாமை உள்ளவர்களுக்கான தகவல்தொடர்புகளை எளிதாக்குவதில் சைகை மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் மொழியியல் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் சைகை மொழிகளை ஆதரிப்பதும் மேம்படுத்துவதும் முக்கியமானது.
உலக சுகாதார அமைப்பு தகவலின் படி இந்தியாவில் 6.3 கோடி பேர் காது கேளாதோர் உள்ளனர். இவ்வளவு பெரிய புள்ளி விவரங்கள் இருந்தும், கூட 120 அதிகமான இந்திய மக்கள் தொகையில் ஒரு சிலர் மட்டுமே காது கேளாதோருடன் தொடர்பு கொள்ளும் அறிவை பெற்றுள்ளனர். உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் தாய் மொழியை தவிர ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கற்றுகொள்ள பெரிதும் ஆர்வம், காட்டுகின்றனர். ஆனால் உலகின் மூத்த மொழியாக இருந்த சைகை மொழியை இன்று பலரும் மறந்து விட்டனர். மனிதர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு முதலில் சைகை மொழியை பயன்படுத்தியதாகவும் பின்னரே எழுத்து ,பேச்சு வடிவங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.
தற்போது சைகை மொழிக்காக பல புதிய வடிவங்களில் செயலிகள் அறிமுகபடுத்த பட்டு வருகின்றன .மேலும் சில செய்தி நிறுவனங்கள் காது கேளாதோருக்கென பிரத்யோகமாக செய்தி வாசிப்பாளர்களை நியமன செய்துள்ளது பாரட்டதக்கதாகும். சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதலை ஒவ்வொரு நாடும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க:"சுரணையற்ற தலைமுறையை அரசியல் உருவாக்கிவிட்டது.. எனக்கு தந்தி அனுப்பியவர் கலைஞர்" - கமல்ஹாசன்!